Sunday, December 11, 2011

கழுத்து அறுபட்டும் அதிசய சேவல்வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Sunday, July 31, 2011

ஆன்மிக சுற்றுலா தொடர்ச்சி


திருவிடைமருதூரிலிருந்து, திருவிழி மிழலைஎன்ற ஸ்தலத்திற்கு கிளம்பினோம்.ஒருவழிசாலை வழியாகத்தான் செல்லவேண்டி இருந்தது.சாலை சுமாராகத்தான் இருந்தது அகவே மிதமானவேகத்தில் சென்றோம்.சாலையின் இருபக்கமும் கவேரிதாயின் நீண்டகரங்களை போல்,சல சல வென ஓடும் நீரோடை அதன் இருகரைகளிலும் காவேரியின் அரவணைப்பில் செழிப்பின் செழுமையாய் கான முடிந்த்தது.பூமித்தாயின் கரும்கூந்தால் போல் தார்சாலை வளைந்து நெளிந்து கிடந்தது. காவேரித்தாயின் அரவணைப்பில் செழுமையையும் பார்த்து ரசித்த நீரோடையின்சல சலப்பைகேட்டபடி, ஒரு ஒருமணிநேர பயணத்திற்கு பின் தென்கரை சிறிய கிராமத்தை அடைந்தோம் பாலத்தின் வழியே நீரோடையை கடந்து சென்றோம் தென்கரை  கரைய்லேயவது இரண்டு முனு கடைகள் இருந்தன,இந்தகரையில் கடைகளே இல்லை வீடுகள் மட்டுமே இருந்தன.கோயில் வாசலில் இறங்கும் போது மணி பண்ணிரண்டரை.கோவில் நடை சாத்தி இருந்தது.கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள். வேறு ஹோட்டல் ஏதும் இல்லாததால்,நாங்களும் அங்கேயோ உணவு அருந்தினோம் .தயிர் சதம்,கோயில் பிரசாதம் போல் சுவையாக இருந்தது. கோயில் நான்கு மணிக்குத்தான் திறக்கபடும் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஒய்வு எடுத்தோம்.மூன்றை மணிக்கே எழுந்து ரெடியானோம் ஓவருவராக கோயில் உழியர்கள் வந்தனர்.இங்கேயும் முன்று மாலை தேங்காய் வாங்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.நாங்கள் வழக்கம்போல் என்ங்கல் குலதெய்வம் அய்யனார் கோயிலில் மட்டும் தான் தேங்காய் உடைப்போம் என்று கூறி வாங்க மறுத்தோம்,கோயில் உழியர்கள் யாரும் வற்புறுத்தவில்லை அங்கு இருந்த மற்றவர்கள் தான்.ஒருவழியாக மாலைமாட்டும் வாங்கிகொண்டு உள்ளே செல்ல எத்தளித்தபோது ஒரு பெரியவர் கல்யாண வயது குழைந்தைகளை அழைத்து வந்து இருக்கிறிகள் தேங்காய் உடைத்து தான் ஆகவேண்டும் இல்லையென்றல் பலன் இல்லை என்று கூற எனது மருமகள் தேங்காய் வாங்கலாம் என்று கூறினால் .சரியென்று தேங்காய் மற்றும் பூஜை குரிய பொருட்கள் வாங்கிகொண்டு உள்லேசென்றோம் .கோவில் மிகவும் பழமையனகோயில் ஆயரம் ஆயிரத்தி அய்நூறு   வருடங்களுக்கு முந்தியது போல் உள்ளது நல்ல பெரியகோயில் வாசலில் ஒரு சிறிய கோபுரம்,எதிரில் ஒரு மண்டபம் அதனருகில் ஒரு சிறிய குளம்,கோபுரவாசலை கடந்த உடன் வெளிபிரகாரம் ஆரம்பிக்கிறது .வலது புறத்தில் ஒருமண்டபம்,இடது புறத்தில் தர்போதையமுரையில் கண்கிரிட்டி னால் கட்டிய இன்னொரு மண்டபம் அதில் அநேகமாக திருவிழா நேரங்களில் சொற்பொழிவு போன்ற நிகழ்சிகள் நடக்கும் இடமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்தவாசலை தாண்டிசுவாமி சந்நிதி சென்றோம். சந்நித்யில் முன்னாள் சிவன் சுயம்புலிங்க வடிவிலும்.அதற்க்கு பின்புறம்,மாப்பிள்ளை சுவாமி என்கிற ஸ்ரீ கர்த்தியயினியாம்பிகை ஸ்மேத ஸ்ரீகல்யனசுந்தரமுர்த்தி.கல்யாண கோலத்தில்காட்சி அளிக்கிறார்  கர்ப்பகிரகத்திற்கு முன் மண்டபாமே திருமண மேடை என்றும் அதன் துண்களில் ஒருதுன் மட்டும் சற்று உள்ளே தள்ளி இருக்கிறது அதுதான் பந்த கால் என்றும் அர்ச்சகர் கூறினார்.அதன் வலது பக்கம் கல்யாண கோலத்தில் ஈஸ்வரனும் அம்பிகையும் பக்கத்தில் பெருமாளும்இருக்கிறார்.பெருமாள் சக்கராயுதம் வேண்டி ஆயிரம் மலர்கொண்டு பூஜை செய ஒருமலர் குறையவே  ,அதற்க்கு பதிலாக தனது விழியை எடுத்து காலடியில் வைத்து ஏற்றுகொள்ளும் படி வேண்டி நிற்பதாகவும்.வீழி என்ற முலிகை செடி அதிகம் இருந்த காரணத்தினால்  திருவிழி மிழலை என்ற பெயருக்கு காரணம் என்று  அர்ச்சகர் கூறினார்.சிவனும் அம்பாளும்,பெருமாளும் இருக்கும்இந்த இடத்தில் தான் தேங்காய் உடைக்கப்பட்டது. அர்ச்சகர் அங்கேயே சற்று தள்ளி வலதுபுறமாக சென்று உடைத்தார்.அவர் உடைத்த இடத்தில் எங்கள் குல்தேய்வம்மான,அய்யனார் பூரண புஷ்கலையுடேன் இருந்தார்.இந்த நிகழ்வு எங்கள் எண்ணப்படிஎங்கள் குலதெய்வமே ஏற்று கொண்டதுபோல் மிக மகிச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியுடன்அம்மன சந்நிதியில் தரிசனம் முடித்து பிரகாரம் வந்து சுற்றினோம்.இந்தகோயிலில் திருநாவுக்கரசர்,ஞான சம்மந்தர் இருவரும் இறைவனிடம் படி காசு வாங்கினர்கலம்.சுந்தரர் திருபாரணம் வாங்கியதாக ஒரு கூற்று கேள்விப்பட்டோம்.அறிய பெரும் ,இறைவனின் அருளை பூரணமாக பெற்ற இந்தமுவரும் வலம்வந்த இடம் என்பதால்,இந்தபுன்னியவான்கள் பாதம் பட்ட இந்த பூமியில் நாமும் வளம் வருகிறோம் என்ற நினைப்பே எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.பிரகாரத்தில் எந்தகோவிலிலும்இல்லாத,பாதாள நந்தி உள்ளது.நந்தி மீது முழு கோயிலும் கட்டியது போல் இருக்கிறது.அதையும் தரிசித்து வெளியே வந்து திருஆலங்குடி சென்று தட்சனா மூர்த்தியை தரிசித்து ஸ்ரீவில்லிபுத்தூர்  வந்து சேர்ந்தோம்.சிவா சிவா போற்றி..இதை படிக்கும் அனைவருக்கும் நல்லாருள் புரிய இறைவனை வேண்டுகிறேன் ஈசனே போற்றி எந்தையடி போற்றி ஈசன் தள்ளாடி போற்றி,திருசிற்றம்பலம் .                                                                     

  [Image1]
 பார்வதி திருமணம்: காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.
அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.
முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெயர்க்காரணம்: ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.
வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.
படிக்காசு: சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது.
இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர்.
இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.
 
   
  தல வரலாறு:
நன்றி தினமலர்  

Friday, July 29, 2011

சூரியனார் கோவிலை விட்டுவெளியா வந்த நாங்கள்.அருகில் இருந்ததிரு மங்கள குடிக்கு வந்து மங்கலாம்பிகையாய் தரிசித்துவிட்டு .அதற்க்கு அருகில் இருந்த திரு விடைமருதூர் ஈஸ்வரன் கோவில் சென்றோம். நல்ல பெரிய கோவிலாக இருந்தது.அங்கு உள்ளே நுழையும்போதே ஒரு பெண்மணி எங்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.அது எங்களுக்கு ஒரு நற்சகுன மாகவே பட்டது சந்தோஷமாகவே இருந்தது. முதல் வாசலிலேயே வரகுன்பாண்டியன் பிரமஹஷ்த்தி தோஷம் கழித்த  இடம் என்று எழுதி இருந்தது அங்கு உப்பு வாங்கி தலை சுற்றி போட்டால் தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம் அத்துடன் அந்த வாசலை யார் கடந்தாலும் அவர்களின் தோஷம் கழிந்துவிடும் இந்த வாசல்வழியே திரும்பவும் கடந்து வெளியே சென்றால் தோஷம் திரும்பவந்துவிடும்என்பதால் திரும்ப இந்தவாசல் வழியே யாரும் வருவதில்லை.வாசலை கடந்து உள்ளே செல்பவர்கள் ஈஸ்வரன் சந்நிதி சென்று ஈஸ்வரனை வாங்கிவிட்டு.அங்கிருந்து நேரே அம்மன் சந்நிதி வந்து அம்மனை தரிசித்துவிட்டு .அம்மன் சந்நிதி வாசல் வழியாக வந்து ,வாசலில் இருக்கும் முகாம்பிகை சந்நிதியில்முகாம்பிகையாய்தரிசித்து அருகில் இருக்கும் மேருவை வணங்கி வெளிஎவரவேண்டும் என்ற நியதிக்கு இணங்க நாங்களும் அவரே தரிசனம் முடித்து வெளியே வந்தோம் தொடரும்

Thursday, July 28, 2011

ஒரு ஆன்மிக சுற்றுலா

குடும்பத்துடன் ஒரு ஆன்மிக சுற்றுலா சென்று வர தீர்மானித்தோம்.எங்கு செல்லலாம் எண்ணுபோது குபகோணம் பகுதியில் உள்ள சிலகோயில் களுக்கு செல்லலாம் என்று முடிவு செயப்பட்டது.17.07.2011 ஞாயறு அன்று இரவு குவ்ளிஷ் வண்டி ஒன்றை அமத்தி எனது தங்கை குடும்பமும் நானும் கிளம்பினோம் இரவு பயணம் ஆனதால்,குமிருட்டில் காற்றை கிழித்து கொண்டு வண்டி பறந்தது காலை ஆறரை மணி அளவில் சூரியனார் கோவில் வந்து சேர்ந்தோம் கட்டண குளியல் இடத்தில் காலை கடன் கலை முடித்துகொண்டு கோவிலுக்கு சென்றோம் உள்ளே இருந்த யாவாரிகளும் புரோக்கார்களும்  பத்து தேங்க வாங்கவேண்டும் அப்படினா தான் அர்ச்சனை செயபடும் என்றுகூற, நாங்கள் எங்கள் குலதெய்வ கோவிலில் மட்டும்தான் தேங்க உடைப்பது வழக்கம் மற்ற கோவில்களில் அர்ச்சனை மட்டுமே செய் வோம் என்று கூறி மறுக்க.கட்டாயம் தேங்காய் வாங்க வேண்டும் வருபுருத்தினார்கள் அதனை பெரும் சேர்ந்து கொண்டு அர்ச்சனை டிகட் தரமாட்டார்கள் என்று கூறி பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அது எதையும் பொருட்படுத்தாமல் டிகட் கவுண்டரில் நின்று அர்ச்சனை டிகட் கேட்க,மறுப்பேதும் இல்லாமல் டிகட் தந்து விட அர்ச்சனை செய்து தரிசனம் முடித்து சந்தோஷமாக வெளியே வந்தோம்.இதில் இன்னுமொரு வேடிக்கை எனவேன்றல் இந்த பத்து தேங்காயும் உடைத்து அதுதையும் வீடிற்கு கொண்டுசெல்ல கூடாது என்பதும் ,அங்கேயே தானம் செய்து விடவேண்டும்என்பதும்  அங்கு உள்ள ஐதீகம்.அதாவது அவர்களிடமே கொடுத்து விடவேண்டும் இதற்க்கு தான் இதனை பாடும்.இதற்காக அங்கு வருவோரிடம் எல்லாம் இப்படித்தான் செய்யவேண்டும் இல்லாவிட்டால் பலன்கிடைக்காது என்று அவர்களின் மனதை காயபடுத்தி இதை பெறுகிறார்கள் அனால் அது பாவம் என்று தெரியவில்லை.அத்துடன் புனியஸ்தலத்தை யவாரஸ்தலம் ஆக்கி விடுகிறார்கள் இதை நினைக்கும் பொது மனசு மிகவும் கஷ்ட்டப்படுகிறது.                                              தொடரும்               

Friday, June 17, 2011

எனக்கு மேல் படித்த மாப்பிளை கேட்பதால் பெற்றவர்கள் படும் பாடு

இன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன் அம்மன் தரிசனம் நன்றாக  இருந்தது .இன்று வெள்ளிகிலமையகையல் வெள்ளி பாவாடம் சார்த்தி இருதர்கள் நன்றாக இருந்தது..தரிசன முடித்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது அருகில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அவர்களை ஒத்த பெண்மணிகளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை விட அழுதுகொண்டு இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்கள் பேசியது என்காது களிலும் விழுந்தது.என்மகள் என்சொன்னாலும் 
கேட்கமாடேன்க்ரா,எனக்குமேல் படித்தவர் தான் வேணும் என்கிற, என்று கூறி அழுதார்கள். மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒரு பெண் பிறந்து படிக்கவைத்து,அவர்களுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி சீர்சினைதைகள் செயிது கட்டி கொடுக்கும் முன் பெற்றவர்கள் படும் பாடு, இந்த அவஸ்த்தைகள் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது.இதற்க்கு தீருவுதான் என்ன?
புரியவில்லை அம்மனிடம் வழி காட்டும் படி வேண்டி கொண்டு வெளியில் வந்தேன் மனபாரத்துடன் இதை பகிர்வதன் முலம் மன நிறைவுனு சொல்லமுடியாது பாரத்தை குறைத்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 
  
     

Monday, May 30, 2011

மனித நேயம் இன்னு குறையவில்லை என்று சங்கே முழங்கு

அதிகாலை 7 மணி இருக்கும்,கோடைகாலம் ஆதலால்  அதிக குளிர்ச்சி இல்லை வெப்பமும் இல்லை மிதமான ஒருநேரம். நான் சங்கரன் கோயில் செல்ல பேருந்து வண்டியில் ஏறினேன்.அந்த காலை நேரத்திலும்,கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் வண்டியில் நின்று கொண்டு பயணம் செய்யும் அளவுக்கு பயணிகள் இருந்தனர்.ராஜபாளையத்தை நெருங்கிய நிலையில் பஞ்சுமார்கெட் ஸ்டாப் வந்தது .அதில் ஒருசில பயணிகள் இறங்கினர் மூவர் அமரும் சீட்டில்அந்த அம்மா அமர்ந்து இருந்தார்கள்.வயது 60 தாண்டி இருக்கும் சற்று பருமனான உடம்பு அதாவது சட்டனு எழமுடியாத அளவுக்கு;.அவர்கள் அருகில் அமர்ந்திருந்த இருவர் இறங்கிவிடவே, அவர் மட்டும் இருந்தார்.அவர் சீட்டுக்கு அருகில் கொஞ்ச வயது பையன் கள் இருவர் நின்று  இருந்தனர்,அப்போது அந்தம்மா தனக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் அமரும் படி கூறினார்கள்.அவர்களைத்தாண்டி அவர்கள் அமருவது  என்பது முடியாத காரியம், இதை புரிந்துகொண்ட அந்தாம்மா மிகவும் கஸ்ட்டப்பட்டு எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.இந்த நிகழ்வு அவர்களின் பெரிய மனதை காட்டியது.எப்படி ஆண்களே ஒழுங்கா எழுந்து இடம் கொடுப்பது மிகவு அறியத்தான இந்த காலகட்டங்களில்.அத்துடன் கைகுழந்தையுடன் வருபெங்களுக்கே பெண்கள் எழுந்து இடம் கொடுப்பது இப்போது பார்க்கமுடியவில்லை,அதற்காக எல்லாப்பெண்களும் அப்படி என்று கூறவரவில்லைசில பெண்கள் அப்படியும் இறக்கம் இல்லாமல் இருகிறார்கள் அவர்கள் மத்தியில் இவர்கள் ஆண்களுக்கு கஸ்ட்டப்பட்டு இடம் கொடுத்தது மிகபெரியஈரமான நிகழ்வாகவே எனக்கு தெரிந்தது.அவர்கள் அந்த இடத்தை   கொடுக்காவிட்டாலும் அது பெரிதாக தெரிந்து இருக்காது.பெண்களுக்கு பெண்களே இடம்கொடுக்காத நிலையில் இவர்கள் மிகவும் சிரமப்பட்டு இடம் கொடுத்தது எனக்கு பெரிசகாவே பட்டது இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டதன மூலம் அந்தஅம்மாவின் பெரிய மனதை மதிபதுடன் அவர்களின் ஈரத்தன்மையை போற்றுகிறேன் வாழ்க வளமுடன்   

Tuesday, May 3, 2011

பராசக்தியின் அருள் வேண்டி 
பராசக்தியின் பரிவில் திளைக்கவும் வேண்டும்
பார்போற்றும் பாக்கியம் வேண்டும்
சொல்லும் செயலுஒன்றகவேண்டும்
எல்லாசெயலும் நன்றாக வேண்டும்       
சத்தமில்லாத சங்கிதம் வேண்டும்
சாதனைபடைக்கும் பேராற்றல் வேண்டும்   
சாய்ந்து கொள்ள உறவுகள் வேண்டும்
உழைத்துசம்பாதிக்க பதவியும் வேண்டும் 
செலவு செய்ய சகோதரி வேண்டும் 
மகிழ்ச்சியடைய சம்சாரம் வேண்டும் 
அணிந்துபார்க்க அம்மாவேண்டும்
அன்பாய்இருக்க ஆண் மகன் வேண்டு                                                             
அழகுபார்க்க ஒரு மகளும் வேண்டும் 
ஆண்டு அனுபவிக்க சொந்தங்கள் வேண்டும் 
சொந்தம் கொண்டாடிட உறவினர்வேண்டும் 
                                                                                    
இதி ஏதும் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள் 
குறை இருந்தால் என்னிடம் (மெயில் )
நிறை இருந்தால் இடுகையில் இடுங்கள்
subburajpiramu@gmail.com 

Tuesday, April 19, 2011


 மழை யில் நனைய வேண்டும்
பூமி குளிர வேண்டும்
செடிகொடி தழைக்க வேண்டும்
பூஉலகசெழிக்க வேண்டும்
மக்கள் நலமாக வாழ வேண்டும்
வாழ்க வளமுடன்

Monday, April 18, 2011

பிரச்னைக்கு தீர்வு ஒரு தயிர் கப்பில்

பிரச்னைக்கு தீர்வு ஒரு தயிர் கப்பில் 
ஒரு கப்பில் உள்ள தயிரில்,  வெண்ணை நெய் மோர் முன்றும் உள்ளது.அனால் தெரிவது தயிர் மட்டுமே ,இதனையும் அப்போ எப்படி கிடைக்கிறது தயிராய் ஒரு மத்தினால் கடையும் பொது. அதுபோல் தன பிரச்சனைகளும் . பிரச்சனைகளை பிரச்சனைகளாக பார்க்கும் வரை பிரச்சனை பெரிய பூதகரமானஒன்றாக தெரியும் பிரச்சனைகளை தயிர் போல் பாவித்து தயிராய் மத்தினால் கடைவதுபோல்  மூளையின்   உதவியுடன் அறிவை கொண்டு வெகு தீர்க்கமாக ஆராயிந்து பிரச்னையை சீர்துக்கிபார்த்து கடுமையான் முயற்சிக்குப்பின் நுனி உங்களுக்கு கிடைக்கும். நுனிகிடைத்தால்போதாத நீங்கள் பிரித்து மேயிந்து விட மாட்டிர்கள?எதை கடினம் என்று நினைத்தால் கடினம் தான் முடியும் என்று நினைதது கூர்ந்து கவனித்தால் நுனி முடிச்சை கண்டது விடுவீர்கள் வெற்றி உங்களுக்கே வாழ்க வளமுடன் அறிவு பூர்வமான வெற்றி பெற வாழ்த்துக்கள்         

தைரியமான பெண் வாழ்த்துக்கள்.

கருங்குழல்போன்று நீண்டு கிடந்த தார் ரோட்டின்மீது.பஸ் பயனித்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிரில் வந்த டூவீலரில் மோதிவிட,டூவீலர் சற்று  தள்ளிவிழுந்த்துவிட ,டூவீலரில் வந்தவர்கள் சிறிது காயத்துடன் தப்பிவிட,இது தெரியாதஓட்டுனர்,வண்டியில் வந்தவர்கள் வீலில் மட்டிகொண்டுவிட்டதாக நினனைத்து,பதட்டத்தில்வண்டியை விட்டு குதித்து ஓடிவிட.பஸ் தாறுமாறாக ஓட பஸ்ஸில் இருந்த பயணிகள் கூக்குரலிட. பஸ்ஸில் இருந்த பெண் பயணி ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓட்டுனர் இடத்துக்கு மாரி எத எதையோ செய்து பசை லேசாக ஒரு மரத்தில் மோதி நிறுத்தி பஸ்ஸில் இருந்த்த முப்பது பயணிகளையும் காப்பாற்றி விட்டார்.அவரின் தைரியத்தை பாரட்ட வேண்டியது நமது கடமை அந்த பெண் வாழ்க வளமுடன்.மென் மேலும் சிறந்த வளர வாழ்த்துக்கள்.   

Saturday, April 16, 2011


பாடித்ததில் ரசித்தது   


நீ வரத்தை வாளெடுத்துப்


போர்புரிகையில் 
கண்ணீர் கேடயங்களோடு 
காத்திருப்பேன் 
முட்டினாலும் மோதினாலும் 
இறுதியில் வெல்வது 
எப்போதும் நான் தான் 

Thursday, April 7, 2011

காச்சின் விசுவாசம்

பாரத்ததில்  ரசித்தது காச்சிகோ  
            காச்சிகோஎன்ற திரைப்படம் பார்த்தேன் மிகவு நன்று.தன எஜமானர் மிது நாய் கொண்ட அன்பை கட்டுவது தான் கதை.இரண்டு முனு பத்திரங்களை கொண்டது மிகவும் அழககொண்டு செல்கிறார் இயக்குனர்.ரயில்வே ஸ்டேசனில் ஒரு சிறு நாய் குட்டியை காண்கிறார்,அதை தன்னுடன் அழைத்துசென்று வளர்கிறா.அந்த நாய் அவருடன் சட்சனுக்கு வருகிறது,அவர் வேலைபார்த்து திரும்ப்பும்போது ஸ்டேசனில் இருந்து வீடு திரும்ப்புகிறது.இது ரோடீணாக தினத்தோறும் நடை பெறுகிறது. இரண்டு வருடம் கடந்து ஒரு நாள் இதேபோல் வீட்டிலிருந்து ஸ்டேசன் வந்து வேலைக்கு சென்றவர்.அன்க்கே இறந்து விட இது தெரியாத நாய் ஸ்டேசனில் காத்திருகிறது.அவர் வந்து வேடுவர் என்று பல நாள் கழிகிறது.ஒருநாள் அந்த வாழு வந்த அவர் மகள் நாயை தன வீட்டிக்கு கூட்டி செல்கிறார்அனால் அங்கிருந்து திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து விடுகிறது.ஒரு பழைய குட்ஸ் ரைய்ளுக்கு இடையில் படுத்து கொள்கிறது. ரயில் வரும்போது எல்லாம் . வாசல் பக்கம் வந்து பார்த்து விட்டு திரும்பவும் சென்று படுத்துகொல்கிறது இதுபோல் பதினொரு வருடங்கள் காத்திருகிறது.இதுதான் கதை. இதை மிகவு உணர்ச்சி போர்வமாக ஒருகாவியாம் போல் எடுத்து இருக்கிறார்கள் நாய் தனுனர்ச்சி கலை நன்றக  வெளிப்படுத்துகிறது.மொத்தத்தில்மிகவும் அருமை.இது ஒரு உண்மை கதை ஜப்பானில் அந்த ஸ்டேசனி இந்த நாயிக்கு சிலை இருக்கிறது 
இதை 1923 நில் இந்த நாய் கிடைக்கிறது 1925இல் அதன் எஜமானன் இறந்துபோகிறார்.1934 லில் நாய் இறக்கிறது இந்தபடம் பார்த்த பின் வெகுநேரம் மனதை பதித்தது உன்முகத்தில் ஒரு நாய் அன்பாக நக்கினால் ஏற்படுத்தும் ஈரத்துக்கு நிகராக இந்த உலகத்தில் எந்தவொரு பரிவையும் நீ ஒப்பிட முடியாது என்ற வாசகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது 
  

Saturday, April 2, 2011

படித்ததில் பிடித்தது  
கவிதை ஆனந்தத்தைத் தருகிறது 
கவிதை கவலையி மறக்க செயிகிறது 
கவிதை பாடியே சொல்லவேண்டும் 
வசனம்போல் வாசிக்ககூ டாது 
வசனம் நடப்பதை  போன்றது 
கவிதை நாட்டியம் போன்றது 

Friday, April 1, 2011

சப்பாத்தியின்
கொத்து முள்ளைமிதித்தாது போல்
சங்கடங்கள் அழுத்த
கண்ணிவடிகிற போது
குழந்தைக்குசோறுட்டும்
நிலா மாதிரி
நீங்களேன்
எதிரில் இருப்பதே பாக்கியம்
அறுதல் வேறு
சொல்லவேண்டுமா;
கார்முகில்

Wednesday, March 30, 2011

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்காமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயமென்ன  
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே 

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சத்தும் தில்லையும்
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு எழும்பெற்ற
சீரபி ராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே

Sunday, March 27, 2011

Sathuragiriவெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Friday, March 11, 2011

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்; அறிவில் ஓங்கி இவ் வைய்ந் தழைக்குமாம்,பாரதி

                                       மனது வருமா       
பெண்களுக் 33 பிரசன்ட் ஒதிக்கிட்டு ஆதரிக்கும் கட்சிகள்,இந்த தேர்தலில் பெண்களுக்கு 33 பிரசன்ட் சீட்டு கொடுக்கலாமே,.பெண்களுக்கு 33 பிரசன்ட்சீட் கொடுப்பைவர்களுக்குதான் ஒட் என்று மற்றவர்களை புறக்கணிக்கலாம்.இதற்க்கு பெண்கள் அமைப்பு முன்வரவேண்டும்.இதை ஆர்வம் உள்ள எல்லா பெண்களும் அவரவர் தோழிகளுக்கு தெரிய படுத்துங்கள் மகளிர் தினத்திற்கு பெரிய கிப்ட்ட அமையும் வாழ்க வளமுடன் வெற்றி உங்களுக்கே,         

Tuesday, March 8, 2011

ஆரசு சின்னம் உள்ள ஊர் புறக்கணிக்கக படுகிறது விடிவு கிடைக்குமாஉங்களின் மேலான கருத்துக்களை எதிர் பார்கிறேன்,

ஸ்ரீ ஆண்டாள் பிறந்த புண்ணிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர்.பல ஊர்களில் பலநாடுகளில் இருந்து நிறைய யாத்திரிகர்கள் வந்து போகும் ஒரு சுற்றுலா ஸ்தலம்.அது மட்டும் அல்ல,ஸ்ரீ ஆண்டாள் கோவில் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாகும்,மேலும் இந்த ஊர் தாலுகாவின் தலை நகர்.இந்த ஊரின் ஜனத்தொகை கிட்ட தட்ட ஒரு இலச்சத்திற்கும் மேல் இந்தஊரில் தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் மற்றும் பலதரப்பட்ட அலுவலகமும் இங்கு உள்ளது மேலும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் வடபத்தர்சாயி,வைத்தீஸ்வரன் ஸ்ரீ நிவாஷபெருமல் காட்டு அழகர் கோயில்கள் நிறைந்துள்ள நகரம் இப்படி பட்ட ஊரில்,அரசு சின்னம் உள்ள ஊர் பேருந்து நிலையத்திற்குள் அரசுபேருந்து வருவதில்லை எவல்வு வருத்தமானா நிகழ்வு,இதுமட்டும் அல்ல இந்தஊரில் இருந்து தொலைதூர ஊர்களான சென்னை,கோவை பெங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்து முன்பதிவு கவுண்டர் இல்லை இங்கிருந்து பல பையனிகள் இங்கிருந்து ராஜபாளையம் சென்று,முன்பதிவு செய்யவேண்டும் ,அதபோல் பேருந்தில் ஏறுவதற்கு திரும்பவும் ராஜபாளையம் சென்று ஏறவேண்டும் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செல்லும் இந்த பேருந்தில் ஏறுவதற்கும் ராஜபாளையம் செல்லவேண்டும் இந்த ஊறி போர்டிங் கூட கிடையாது என்பபது இவளவு வேதனை.எடுத்ததற்கெல்லாம் கொடிபிடிக்கும் செங்கொடியாளர்கள் கூட இதற்க்கு ஒன்றும் செய்யவில்லை.இந்தஊர் எம்லேMLA செங்கொடி காரர் இருந்தும் இந்த அவலநிலை.இதை ஆட்சியாளர்க கவனிப்பார்கள?இந்தஊர் பயநிகளின்துயர் தீரும்மா?எப்போது விடிவு என்று ஏங்குகிறார்கள் அரசு சின்னம்உள்ள ஊருக்கு இந்த பாராமுகம் ஏன்?எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் 

Monday, March 7, 2011

தன்னம்பிக்கையின் உதாரண புருஷனை வாழ்த்துவோம்

குளுமையன் தென்றல் கற்று வருடிகொன்ன்டு செல்லும் கடற்கரை.கடலும் வானும் உரசும் இடத்தில்.சிறிய கரும் புள்ளியாக தெரிந்ததது வர வர பெரிதாகி,
ஒரு படகும் அதில் மனிதனும் தெரிகிறார்கள்.கரை வந்து விட படகை மிகவும் சிரமத்துடன் இழுத்து வருகிறான்.இருபத்தியந்து வயது மதிக்க தக்க உருவம்,
சிறிய கண்கள் எடுபான நாசி,அளவானா உதடுகள்,சிறிய தாடி,வெள்ளாவியில் வச்சு வெளுத்தாங்களா என்றுசொல்லமுடியாவிட்டாலும்,கருப்பு இல்லை மாநிறத்துக்கும் சற்று கூடுதல் நிறம்,திடகாத்திரமான உடல் ஐந்து அடிக்கு சற்று குறைவுவான உயரம், மொத்தத்தில் அவலச்சணம் இல்லாத உடல் வாகு இவளவு இருந்தும் கை கால் மட்டும் குழந்தைகள் கை கால் போன்று சிறிதாக சூம்பிபோயிஇருக்கிறது.
        
   இவன் யார் இவனை இவளவுதூரம்எழுதவேண்டிய அவசியம் என்ன என்ற உங்கள் மனதில் எழுகிறது எனுக்கும் புரிகிறது,யானையின் பலம் எதிலே
தும்ப்பிகையிலே; மனிதனின் பலம் எதிலே நம்பிகையிலே ;என்று சொல்வது போல் ,இவன் தன்னம்பிகைக்கு பாத்திரமானவன்,இவன்துத்க்குடிமாவட்டம் விளாத்திகுளத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவன்,இவன் பெயர் மரியசிங் 
இவனை போலவே ஒரு தங்கை அவளும் மற்று திறனளி,மனைவி என்றசிறிய 
குடும்பம் தான் என்றாலும் குடும்பதில் தனை தவிர சம்பாரிக்கவேறு இல்லாத 
நிலை.அவனுடைய பெற்றோர் இருக்கும் வரை நல்ல படியாக கழிந்த காலம் 
பெற்றோருக்கு பின் சிரமப்பட ஆரம்பித்தது,சம்பாரிக்க என்னசெயிவது என்ற
நிலையில்
சக மீனவர்கள் உன்னால் முடியாது என்று,தங்களுடன் மீன் பிடிக்க அழைத்து செல்லவில்லை.அந்த நிலை இலும் மனதை தளரவிடாமல்.அப்படி இப்படியாக ஒரு ஆயிந்தாயரும் தயார் செய்து அதை கொண்டு தர்மொகோல் அட்டைகளை 
வாங்கி அதை வைத்து ஒரு சிறய படகு செய ஆரம்பித்தான். இவன்செயிவதை பார்த்து எல்லினகையடினார்கள் அதை பொருட்படுத்தாமல் மன தையரியத்தை வரவழைத்துகொண்டு செய்து முடித்து அந்த படகில் சென்று மீன் பிடித்து அதை விற்று இன்று தினமும் முன்னோர் ருபைகள் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறன் இந்த உழைப்பாளியை வாழ்த்தா வேண்டாமா?இவான் அதைரியபட்டு இருந்தால்,மற்றவர்கள் சொல்லியது போல்,கிலிந்தா மீன் வலையை தைத்து கொடுத்து. வரும் நாற்ப்பது ருபாய் வருமானத்தில்தான் இருந்திருக்க வேண்டும். தன்விடாமுர்ச்சியல் இன்று முன்னூறு ருபாய் வருமானத்தில் இருக்கும் இந்த இளைஞன் இன்னும் மோட்டார்  பாடகுகளை வாங்கும் அளவுக்கு முன்னுக்குவரவேண்டும.
வருவான் இந்தமாதிரி தன்னம்பிக்கையின் உதாரண புருஷனாக விளங்கும் இந்த இளைங்கனை வாழ்த்தாவேண்டியது நமது கடமை.வாழ்த்துவோம். 
நன்றி புதியதலைமுறைக்கு     
                   

Friday, February 18, 2011

தைரியமான பெண் வாழ்த்துக்கள்.

கருங்குழல்போன்று நீண்டு கிடந்த தார் ரோட்டின்மீது.பஸ் பயனித்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிரில் வந்த டூவீலரில் மோதிவிட,டூவீலர் சற்று  தள்ளிவிழுந்த்துவிட ,டூவீலரில் வந்தவர்கள் சிறிது காயத்துடன் தப்பிவிட,இது தெரியாதஓட்டுனர்,வண்டியில் வந்தவர்கள் வீலில் மட்டிகொண்டுவிட்டதாக நினனைத்து,பதட்டத்தில்வண்டியை விட்டு குதித்து ஓடிவிட.பஸ் தாறுமாறாக ஓட பஸ்ஸில் இருந்த பயணிகள் கூக்குரலிட. பஸ்ஸில் இருந்த பெண் பயணி ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓட்டுனர் இடத்துக்கு மாரி எத எதையோ செய்து பசை லேசாக ஒரு மரத்தில் மோதி நிறுத்தி பஸ்ஸில் இருந்த்த முப்பது பயணிகளையும் காப்பாற்றி விட்டார்.அவரின் தைரியத்தை பாரட்ட வேண்டியது நமது கடமை அந்த பெண் வாழ்க வளமுடன்.மென் மேலும் சிறந்த வளர வாழ்த்துக்கள்.     

Sunday, February 13, 2011

எனக்கு படித்ததில் மிகவும் பிடித்தது

.

ஃபேஸ்புக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Facebook, Inc.
ஃபேஸ்புக்
வகைதனியார்
நிறுவியது{{{foundation}}}
தலைமையகம்பாலோ ஆல்ட்
விளம்பரம்Banner ads
பதிவுவேண்டியுள்ளது
மொழிபல
தொடக்கம்பெப்ரவரி 2004
தற்போதைய நிலைActive
ஃபேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் ஐந்தாம் மிகப் பரவலமான இணையத்தளமாகும்.தமிழ் உட்பட உலகமொழிகள் பலவற்றில் பேஸ்புக்கில் வலம் வரலாம். இன்று இந்த இணையப்பக்கத்தில் மொத்தம் 500,000 பேர் உள்ளனர்

உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா? வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்க ளுக்கு இருக்கிறார்களா? அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் நிச்சயம் 'ஃபேஸ்புக்' பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளம் இளைஞர்களிடையே பிரபல மாகி வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்!

டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு

இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

கணினி என்றாலே அது இண்டர் நெட்டுடன் இணைந்த ஒன்றுதான் என்று ஆகிவிட்டது. அலுவலகங்களில் உள்ள கணினிகளும் இன்று இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இணையப் பயன் பாட்டின் உபவிளைவுதான் ஃபேஸ்புக் போன்ற 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளங்களின் பெருக்கம். 'மை ஸ்பேஸ்,' 'ஆர்குட்' என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2009-ம் ஆண்டு இறுதி யில் இதைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக இருந்தது.
'வரலாறு'
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!
'மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?'
ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

'எனக்கு இன்று மனசு சரியில்லை' என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்... குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.

மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் 'சமூக மூலதனம்' எனச் சொல்லப்படுகிற சமூக உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.
ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ... இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே சிங்கபூர்க்கு அடுத்து ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. 'அதனால் ஆபத்து... இதனால் தொந்தரவு!' என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலித்

[தொகு]References