Wednesday, March 30, 2011

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்காமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயமென்ன  
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே 

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சத்தும் தில்லையும்
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு எழும்பெற்ற
சீரபி ராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே

Sunday, March 27, 2011

Sathuragiri



வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Friday, March 11, 2011

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்; அறிவில் ஓங்கி இவ் வைய்ந் தழைக்குமாம்,பாரதி

                                       மனது வருமா       
பெண்களுக் 33 பிரசன்ட் ஒதிக்கிட்டு ஆதரிக்கும் கட்சிகள்,இந்த தேர்தலில் பெண்களுக்கு 33 பிரசன்ட் சீட்டு கொடுக்கலாமே,.பெண்களுக்கு 33 பிரசன்ட்சீட் கொடுப்பைவர்களுக்குதான் ஒட் என்று மற்றவர்களை புறக்கணிக்கலாம்.இதற்க்கு பெண்கள் அமைப்பு முன்வரவேண்டும்.இதை ஆர்வம் உள்ள எல்லா பெண்களும் அவரவர் தோழிகளுக்கு தெரிய படுத்துங்கள் மகளிர் தினத்திற்கு பெரிய கிப்ட்ட அமையும் வாழ்க வளமுடன் வெற்றி உங்களுக்கே,         

Tuesday, March 8, 2011

ஆரசு சின்னம் உள்ள ஊர் புறக்கணிக்கக படுகிறது விடிவு கிடைக்குமாஉங்களின் மேலான கருத்துக்களை எதிர் பார்கிறேன்,

ஸ்ரீ ஆண்டாள் பிறந்த புண்ணிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர்.பல ஊர்களில் பலநாடுகளில் இருந்து நிறைய யாத்திரிகர்கள் வந்து போகும் ஒரு சுற்றுலா ஸ்தலம்.அது மட்டும் அல்ல,ஸ்ரீ ஆண்டாள் கோவில் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாகும்,மேலும் இந்த ஊர் தாலுகாவின் தலை நகர்.இந்த ஊரின் ஜனத்தொகை கிட்ட தட்ட ஒரு இலச்சத்திற்கும் மேல் இந்தஊரில் தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் மற்றும் பலதரப்பட்ட அலுவலகமும் இங்கு உள்ளது மேலும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் வடபத்தர்சாயி,வைத்தீஸ்வரன் ஸ்ரீ நிவாஷபெருமல் காட்டு அழகர் கோயில்கள் நிறைந்துள்ள நகரம் இப்படி பட்ட ஊரில்,அரசு சின்னம் உள்ள ஊர் பேருந்து நிலையத்திற்குள் அரசுபேருந்து வருவதில்லை எவல்வு வருத்தமானா நிகழ்வு,இதுமட்டும் அல்ல இந்தஊரில் இருந்து தொலைதூர ஊர்களான சென்னை,கோவை பெங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்து முன்பதிவு கவுண்டர் இல்லை இங்கிருந்து பல பையனிகள் இங்கிருந்து ராஜபாளையம் சென்று,முன்பதிவு செய்யவேண்டும் ,அதபோல் பேருந்தில் ஏறுவதற்கு திரும்பவும் ராஜபாளையம் சென்று ஏறவேண்டும் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செல்லும் இந்த பேருந்தில் ஏறுவதற்கும் ராஜபாளையம் செல்லவேண்டும் இந்த ஊறி போர்டிங் கூட கிடையாது என்பபது இவளவு வேதனை.எடுத்ததற்கெல்லாம் கொடிபிடிக்கும் செங்கொடியாளர்கள் கூட இதற்க்கு ஒன்றும் செய்யவில்லை.இந்தஊர் எம்லேMLA செங்கொடி காரர் இருந்தும் இந்த அவலநிலை.இதை ஆட்சியாளர்க கவனிப்பார்கள?இந்தஊர் பயநிகளின்துயர் தீரும்மா?எப்போது விடிவு என்று ஏங்குகிறார்கள் அரசு சின்னம்உள்ள ஊருக்கு இந்த பாராமுகம் ஏன்?எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் 

Monday, March 7, 2011

தன்னம்பிக்கையின் உதாரண புருஷனை வாழ்த்துவோம்

குளுமையன் தென்றல் கற்று வருடிகொன்ன்டு செல்லும் கடற்கரை.கடலும் வானும் உரசும் இடத்தில்.சிறிய கரும் புள்ளியாக தெரிந்ததது வர வர பெரிதாகி,
ஒரு படகும் அதில் மனிதனும் தெரிகிறார்கள்.கரை வந்து விட படகை மிகவும் சிரமத்துடன் இழுத்து வருகிறான்.இருபத்தியந்து வயது மதிக்க தக்க உருவம்,
சிறிய கண்கள் எடுபான நாசி,அளவானா உதடுகள்,சிறிய தாடி,வெள்ளாவியில் வச்சு வெளுத்தாங்களா என்றுசொல்லமுடியாவிட்டாலும்,கருப்பு இல்லை மாநிறத்துக்கும் சற்று கூடுதல் நிறம்,திடகாத்திரமான உடல் ஐந்து அடிக்கு சற்று குறைவுவான உயரம், மொத்தத்தில் அவலச்சணம் இல்லாத உடல் வாகு இவளவு இருந்தும் கை கால் மட்டும் குழந்தைகள் கை கால் போன்று சிறிதாக சூம்பிபோயிஇருக்கிறது.
        
   இவன் யார் இவனை இவளவுதூரம்எழுதவேண்டிய அவசியம் என்ன என்ற உங்கள் மனதில் எழுகிறது எனுக்கும் புரிகிறது,யானையின் பலம் எதிலே
தும்ப்பிகையிலே; மனிதனின் பலம் எதிலே நம்பிகையிலே ;என்று சொல்வது போல் ,இவன் தன்னம்பிகைக்கு பாத்திரமானவன்,இவன்துத்க்குடிமாவட்டம் விளாத்திகுளத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவன்,இவன் பெயர் மரியசிங் 
இவனை போலவே ஒரு தங்கை அவளும் மற்று திறனளி,மனைவி என்றசிறிய 
குடும்பம் தான் என்றாலும் குடும்பதில் தனை தவிர சம்பாரிக்கவேறு இல்லாத 
நிலை.அவனுடைய பெற்றோர் இருக்கும் வரை நல்ல படியாக கழிந்த காலம் 
பெற்றோருக்கு பின் சிரமப்பட ஆரம்பித்தது,சம்பாரிக்க என்னசெயிவது என்ற
நிலையில்
சக மீனவர்கள் உன்னால் முடியாது என்று,தங்களுடன் மீன் பிடிக்க அழைத்து செல்லவில்லை.அந்த நிலை இலும் மனதை தளரவிடாமல்.அப்படி இப்படியாக ஒரு ஆயிந்தாயரும் தயார் செய்து அதை கொண்டு தர்மொகோல் அட்டைகளை 
வாங்கி அதை வைத்து ஒரு சிறய படகு செய ஆரம்பித்தான். இவன்செயிவதை பார்த்து எல்லினகையடினார்கள் அதை பொருட்படுத்தாமல் மன தையரியத்தை வரவழைத்துகொண்டு செய்து முடித்து அந்த படகில் சென்று மீன் பிடித்து அதை விற்று இன்று தினமும் முன்னோர் ருபைகள் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறன் இந்த உழைப்பாளியை வாழ்த்தா வேண்டாமா?இவான் அதைரியபட்டு இருந்தால்,மற்றவர்கள் சொல்லியது போல்,கிலிந்தா மீன் வலையை தைத்து கொடுத்து. வரும் நாற்ப்பது ருபாய் வருமானத்தில்தான் இருந்திருக்க வேண்டும். தன்விடாமுர்ச்சியல் இன்று முன்னூறு ருபாய் வருமானத்தில் இருக்கும் இந்த இளைஞன் இன்னும் மோட்டார்  பாடகுகளை வாங்கும் அளவுக்கு முன்னுக்குவரவேண்டும.
வருவான் இந்தமாதிரி தன்னம்பிக்கையின் உதாரண புருஷனாக விளங்கும் இந்த இளைங்கனை வாழ்த்தாவேண்டியது நமது கடமை.வாழ்த்துவோம். 
நன்றி புதியதலைமுறைக்கு