இன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன் அம்மன் தரிசனம் நன்றாக இருந்தது .இன்று வெள்ளிகிலமையகையல் வெள்ளி பாவாடம் சார்த்தி இருதர்கள் நன்றாக இருந்தது..தரிசன முடித்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது அருகில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அவர்களை ஒத்த பெண்மணிகளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை விட அழுதுகொண்டு இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்கள் பேசியது என்காது களிலும் விழுந்தது.என்மகள் என்சொன்னாலும்
கேட்கமாடேன்க்ரா,எனக்குமேல் படித்தவர் தான் வேணும் என்கிற, என்று கூறி அழுதார்கள். மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒரு பெண் பிறந்து படிக்கவைத்து,அவர்களுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி சீர்சினைதைகள் செயிது கட்டி கொடுக்கும் முன் பெற்றவர்கள் படும் பாடு, இந்த அவஸ்த்தைகள் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது.இதற்க்கு தீருவுதான் என்ன?
புரியவில்லை அம்மனிடம் வழி காட்டும் படி வேண்டி கொண்டு வெளியில் வந்தேன் மனபாரத்துடன் இதை பகிர்வதன் முலம் மன நிறைவுனு சொல்லமுடியாது பாரத்தை குறைத்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்