Monday, May 30, 2011

மனித நேயம் இன்னு குறையவில்லை என்று சங்கே முழங்கு

அதிகாலை 7 மணி இருக்கும்,கோடைகாலம் ஆதலால்  அதிக குளிர்ச்சி இல்லை வெப்பமும் இல்லை மிதமான ஒருநேரம். நான் சங்கரன் கோயில் செல்ல பேருந்து வண்டியில் ஏறினேன்.அந்த காலை நேரத்திலும்,கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் வண்டியில் நின்று கொண்டு பயணம் செய்யும் அளவுக்கு பயணிகள் இருந்தனர்.ராஜபாளையத்தை நெருங்கிய நிலையில் பஞ்சுமார்கெட் ஸ்டாப் வந்தது .அதில் ஒருசில பயணிகள் இறங்கினர் மூவர் அமரும் சீட்டில்அந்த அம்மா அமர்ந்து இருந்தார்கள்.வயது 60 தாண்டி இருக்கும் சற்று பருமனான உடம்பு அதாவது சட்டனு எழமுடியாத அளவுக்கு;.அவர்கள் அருகில் அமர்ந்திருந்த இருவர் இறங்கிவிடவே, அவர் மட்டும் இருந்தார்.அவர் சீட்டுக்கு அருகில் கொஞ்ச வயது பையன் கள் இருவர் நின்று  இருந்தனர்,அப்போது அந்தம்மா தனக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் அமரும் படி கூறினார்கள்.அவர்களைத்தாண்டி அவர்கள் அமருவது  என்பது முடியாத காரியம், இதை புரிந்துகொண்ட அந்தாம்மா மிகவும் கஸ்ட்டப்பட்டு எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.இந்த நிகழ்வு அவர்களின் பெரிய மனதை காட்டியது.எப்படி ஆண்களே ஒழுங்கா எழுந்து இடம் கொடுப்பது மிகவு அறியத்தான இந்த காலகட்டங்களில்.அத்துடன் கைகுழந்தையுடன் வருபெங்களுக்கே பெண்கள் எழுந்து இடம் கொடுப்பது இப்போது பார்க்கமுடியவில்லை,அதற்காக எல்லாப்பெண்களும் அப்படி என்று கூறவரவில்லைசில பெண்கள் அப்படியும் இறக்கம் இல்லாமல் இருகிறார்கள் அவர்கள் மத்தியில் இவர்கள் ஆண்களுக்கு கஸ்ட்டப்பட்டு இடம் கொடுத்தது மிகபெரியஈரமான நிகழ்வாகவே எனக்கு தெரிந்தது.அவர்கள் அந்த இடத்தை   கொடுக்காவிட்டாலும் அது பெரிதாக தெரிந்து இருக்காது.பெண்களுக்கு பெண்களே இடம்கொடுக்காத நிலையில் இவர்கள் மிகவும் சிரமப்பட்டு இடம் கொடுத்தது எனக்கு பெரிசகாவே பட்டது இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டதன மூலம் அந்தஅம்மாவின் பெரிய மனதை மதிபதுடன் அவர்களின் ஈரத்தன்மையை போற்றுகிறேன் வாழ்க வளமுடன்   

3 comments:

கீதமஞ்சரி said...

அந்தப் பெண்மணியின் இளகியமனம் போற்றுதற்குரியதுதான். பகிர்ந்ததற்கு நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் தான் மனிதாபிமானத்தின் சாரத்தை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது
பதிவால் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

அந்தஅம்மாவின் பெரிய மனதை மதிபதுடன் அவர்களின் ஈரத்தன்மையை போற்றுகிறேன் வாழ்க வளமுடன் //

வாழ்க வளமுடன் ..வாழ்க வளமுடன்