திருவிடைமருதூரிலிருந்து, திருவிழி மிழலைஎன்ற ஸ்தலத்திற்கு கிளம்பினோம்.ஒருவழிசாலை வழியாகத்தான் செல்லவேண்டி இருந்தது.சாலை சுமாராகத்தான் இருந்தது அகவே மிதமானவேகத்தில் சென்றோம்.சாலையின் இருபக்கமும் கவேரிதாயின் நீண்டகரங்களை போல்,சல சல வென ஓடும் நீரோடை அதன் இருகரைகளிலும் காவேரியின் அரவணைப்பில் செழிப்பின் செழுமையாய் கான முடிந்த்தது.பூமித்தாயின் கரும்கூந்தால் போல் தார்சாலை வளைந்து நெளிந்து கிடந்தது. காவேரித்தாயின் அரவணைப்பில் செழுமையையும் பார்த்து ரசித்த நீரோடையின்சல சலப்பைகேட்டபடி, ஒரு ஒருமணிநேர பயணத்திற்கு பின் தென்கரை சிறிய கிராமத்தை அடைந்தோம் பாலத்தின் வழியே நீரோடையை கடந்து சென்றோம் தென்கரை கரைய்லேயவது இரண்டு முனு கடைகள் இருந்தன,இந்தகரையில் கடைகளே இல்லை வீடுகள் மட்டுமே இருந்தன.கோயில் வாசலில் இறங்கும் போது மணி பண்ணிரண்டரை.கோவில் நடை சாத்தி இருந்தது.கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள். வேறு ஹோட்டல் ஏதும் இல்லாததால்,நாங்களும் அங்கேயோ உணவு அருந்தினோம் .தயிர் சதம்,கோயில் பிரசாதம் போல் சுவையாக இருந்தது. கோயில் நான்கு மணிக்குத்தான் திறக்கபடும் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஒய்வு எடுத்தோம்.மூன்றை மணிக்கே எழுந்து ரெடியானோம் ஓவருவராக கோயில் உழியர்கள் வந்தனர்.இங்கேயும் முன்று மாலை தேங்காய் வாங்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.நாங்கள் வழக்கம்போல் என்ங்கல் குலதெய்வம் அய்யனார் கோயிலில் மட்டும் தான் தேங்காய் உடைப்போம் என்று கூறி வாங்க மறுத்தோம்,கோயில் உழியர்கள் யாரும் வற்புறுத்தவில்லை அங்கு இருந்த மற்றவர்கள் தான்.ஒருவழியாக மாலைமாட்டும் வாங்கிகொண்டு உள்ளே செல்ல எத்தளித்தபோது ஒரு பெரியவர் கல்யாண வயது குழைந்தைகளை அழைத்து வந்து இருக்கிறிகள் தேங்காய் உடைத்து தான் ஆகவேண்டும் இல்லையென்றல் பலன் இல்லை என்று கூற எனது மருமகள் தேங்காய் வாங்கலாம் என்று கூறினால் .சரியென்று தேங்காய் மற்றும் பூஜை குரிய பொருட்கள் வாங்கிகொண்டு உள்லேசென்றோம் .கோவில் மிகவும் பழமையனகோயில் ஆயரம் ஆயிரத்தி அய்நூறு வருடங்களுக்கு முந்தியது போல் உள்ளது நல்ல பெரியகோயில் வாசலில் ஒரு சிறிய கோபுரம்,எதிரில் ஒரு மண்டபம் அதனருகில் ஒரு சிறிய குளம்,கோபுரவாசலை கடந்த உடன் வெளிபிரகாரம் ஆரம்பிக்கிறது .வலது புறத்தில் ஒருமண்டபம்,இடது புறத்தில் தர்போதையமுரையில் கண்கிரிட்டி னால் கட்டிய இன்னொரு மண்டபம் அதில் அநேகமாக திருவிழா நேரங்களில் சொற்பொழிவு போன்ற நிகழ்சிகள் நடக்கும் இடமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்தவாசலை தாண்டிசுவாமி சந்நிதி சென்றோம். சந்நித்யில் முன்னாள் சிவன் சுயம்புலிங்க வடிவிலும்.அதற்க்கு பின்புறம்,மாப்பிள்ளை சுவாமி என்கிற ஸ்ரீ கர்த்தியயினியாம்பிகை ஸ்மேத ஸ்ரீகல்யனசுந்தரமுர்த்தி.கல்யாண கோலத்தில்காட்சி அளிக்கிறார் கர்ப்பகிரகத்திற்கு முன் மண்டபாமே திருமண மேடை என்றும் அதன் துண்களில் ஒருதுன் மட்டும் சற்று உள்ளே தள்ளி இருக்கிறது அதுதான் பந்த கால் என்றும் அர்ச்சகர் கூறினார்.அதன் வலது பக்கம் கல்யாண கோலத்தில் ஈஸ்வரனும் அம்பிகையும் பக்கத்தில் பெருமாளும்இருக்கிறார்.பெருமாள் சக்கராயுதம் வேண்டி ஆயிரம் மலர்கொண்டு பூஜை செய ஒருமலர் குறையவே ,அதற்க்கு பதிலாக தனது விழியை எடுத்து காலடியில் வைத்து ஏற்றுகொள்ளும் படி வேண்டி நிற்பதாகவும்.வீழி என்ற முலிகை செடி அதிகம் இருந்த காரணத்தினால் திருவிழி மிழலை என்ற பெயருக்கு காரணம் என்று அர்ச்சகர் கூறினார்.சிவனும் அம்பாளும்,பெருமாளும் இருக்கும்இந்த இடத்தில் தான் தேங்காய் உடைக்கப்பட்டது. அர்ச்சகர் அங்கேயே சற்று தள்ளி வலதுபுறமாக சென்று உடைத்தார்.அவர் உடைத்த இடத்தில் எங்கள் குல்தேய்வம்மான,அய்யனார் பூரண புஷ்கலையுடேன் இருந்தார்.இந்த நிகழ்வு எங்கள் எண்ணப்படிஎங்கள் குலதெய்வமே ஏற்று கொண்டதுபோல் மிக மகிச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியுடன்அம்மன சந்நிதியில் தரிசனம் முடித்து பிரகாரம் வந்து சுற்றினோம்.இந்தகோயிலில் திருநாவுக்கரசர்,ஞான சம்மந்தர் இருவரும் இறைவனிடம் படி காசு வாங்கினர்கலம்.சுந்தரர் திருபாரணம் வாங்கியதாக ஒரு கூற்று கேள்விப்பட்டோம்.அறிய பெரும் ,இறைவனின் அருளை பூரணமாக பெற்ற இந்தமுவரும் வலம்வந்த இடம் என்பதால்,இந்தபுன்னியவான்கள் பாதம் பட்ட இந்த பூமியில் நாமும் வளம் வருகிறோம் என்ற நினைப்பே எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.பிரகாரத்தில் எந்தகோவிலிலும்இல்லாத,பாதாள நந்தி உள்ளது.நந்தி மீது முழு கோயிலும் கட்டியது போல் இருக்கிறது.அதையும் தரிசித்து வெளியே வந்து திருஆலங்குடி சென்று தட்சனா மூர்த்தியை தரிசித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தோம்.சிவா சிவா போற்றி..இதை படிக்கும் அனைவருக்கும் நல்லாருள் புரிய இறைவனை வேண்டுகிறேன் ஈசனே போற்றி எந்தையடி போற்றி ஈசன் தள்ளாடி போற்றி,திருசிற்றம்பலம் .
| ||||||
|