Thursday, July 28, 2011

ஒரு ஆன்மிக சுற்றுலா

குடும்பத்துடன் ஒரு ஆன்மிக சுற்றுலா சென்று வர தீர்மானித்தோம்.எங்கு செல்லலாம் எண்ணுபோது குபகோணம் பகுதியில் உள்ள சிலகோயில் களுக்கு செல்லலாம் என்று முடிவு செயப்பட்டது.17.07.2011 ஞாயறு அன்று இரவு குவ்ளிஷ் வண்டி ஒன்றை அமத்தி எனது தங்கை குடும்பமும் நானும் கிளம்பினோம் இரவு பயணம் ஆனதால்,குமிருட்டில் காற்றை கிழித்து கொண்டு வண்டி பறந்தது காலை ஆறரை மணி அளவில் சூரியனார் கோவில் வந்து சேர்ந்தோம் கட்டண குளியல் இடத்தில் காலை கடன் கலை முடித்துகொண்டு கோவிலுக்கு சென்றோம் உள்ளே இருந்த யாவாரிகளும் புரோக்கார்களும்  பத்து தேங்க வாங்கவேண்டும் அப்படினா தான் அர்ச்சனை செயபடும் என்றுகூற, நாங்கள் எங்கள் குலதெய்வ கோவிலில் மட்டும்தான் தேங்க உடைப்பது வழக்கம் மற்ற கோவில்களில் அர்ச்சனை மட்டுமே செய் வோம் என்று கூறி மறுக்க.கட்டாயம் தேங்காய் வாங்க வேண்டும் வருபுருத்தினார்கள் அதனை பெரும் சேர்ந்து கொண்டு அர்ச்சனை டிகட் தரமாட்டார்கள் என்று கூறி பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அது எதையும் பொருட்படுத்தாமல் டிகட் கவுண்டரில் நின்று அர்ச்சனை டிகட் கேட்க,மறுப்பேதும் இல்லாமல் டிகட் தந்து விட அர்ச்சனை செய்து தரிசனம் முடித்து சந்தோஷமாக வெளியே வந்தோம்.இதில் இன்னுமொரு வேடிக்கை எனவேன்றல் இந்த பத்து தேங்காயும் உடைத்து அதுதையும் வீடிற்கு கொண்டுசெல்ல கூடாது என்பதும் ,அங்கேயே தானம் செய்து விடவேண்டும்என்பதும்  அங்கு உள்ள ஐதீகம்.அதாவது அவர்களிடமே கொடுத்து விடவேண்டும் இதற்க்கு தான் இதனை பாடும்.இதற்காக அங்கு வருவோரிடம் எல்லாம் இப்படித்தான் செய்யவேண்டும் இல்லாவிட்டால் பலன்கிடைக்காது என்று அவர்களின் மனதை காயபடுத்தி இதை பெறுகிறார்கள் அனால் அது பாவம் என்று தெரியவில்லை.அத்துடன் புனியஸ்தலத்தை யவாரஸ்தலம் ஆக்கி விடுகிறார்கள் இதை நினைக்கும் பொது மனசு மிகவும் கஷ்ட்டப்படுகிறது.                                              தொடரும்               

No comments: