Friday, July 29, 2011

சூரியனார் கோவிலை விட்டுவெளியா வந்த நாங்கள்.அருகில் இருந்ததிரு மங்கள குடிக்கு வந்து மங்கலாம்பிகையாய் தரிசித்துவிட்டு .அதற்க்கு அருகில் இருந்த திரு விடைமருதூர் ஈஸ்வரன் கோவில் சென்றோம். நல்ல பெரிய கோவிலாக இருந்தது.அங்கு உள்ளே நுழையும்போதே ஒரு பெண்மணி எங்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.அது எங்களுக்கு ஒரு நற்சகுன மாகவே பட்டது சந்தோஷமாகவே இருந்தது. முதல் வாசலிலேயே வரகுன்பாண்டியன் பிரமஹஷ்த்தி தோஷம் கழித்த  இடம் என்று எழுதி இருந்தது அங்கு உப்பு வாங்கி தலை சுற்றி போட்டால் தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம் அத்துடன் அந்த வாசலை யார் கடந்தாலும் அவர்களின் தோஷம் கழிந்துவிடும் இந்த வாசல்வழியே திரும்பவும் கடந்து வெளியே சென்றால் தோஷம் திரும்பவந்துவிடும்என்பதால் திரும்ப இந்தவாசல் வழியே யாரும் வருவதில்லை.வாசலை கடந்து உள்ளே செல்பவர்கள் ஈஸ்வரன் சந்நிதி சென்று ஈஸ்வரனை வாங்கிவிட்டு.அங்கிருந்து நேரே அம்மன் சந்நிதி வந்து அம்மனை தரிசித்துவிட்டு .அம்மன் சந்நிதி வாசல் வழியாக வந்து ,வாசலில் இருக்கும் முகாம்பிகை சந்நிதியில்முகாம்பிகையாய்தரிசித்து அருகில் இருக்கும் மேருவை வணங்கி வெளிஎவரவேண்டும் என்ற நியதிக்கு இணங்க நாங்களும் அவரே தரிசனம் முடித்து வெளியே வந்தோம் தொடரும்

No comments: