Friday, October 19, 2012

     நான் சமீபத்தில் அலுவலக விஷயமாக வனஜா என்பவரை சந்தித்தேன் .
பெங்களூரின் மிக மிக பாஷ்  லொகலிட்டியில் இருந்தது அந்த பங்களா நான் சென்றபோது காலை ஒன்பது மணி இருக்கும்   வனஜா வந்திருக்கவில்லை .வீட்டின் காவலாளி கேட்டை திறந்து  உள்ளே ஹாலில் உக்கார வைத்தார் பல லகரங்களை விழுங்கிய இன்டீரியர்ஸ் ...சகல    செளகரியங்களும் நிறைந்த வீடு. சற்று நேரத்துக்கெல்லாம் சமையல்காரம்மாள் வந்து தேநீர் கோப்பையை வைத்துவிட்டுப் போனார் டீ  யை எடுத்துக் குடிப்பதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த புஷு புஷு பூனைகள் இரண்டு பச்சை பளிங்குக்   கண்கள் மின்ன அசாதாரண சைஸில் மிரட்டின .வால்கள் புஷ்டியாக நீண்டு அழகாக இருந்தன அதில்.அது என்னை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு ஷோப மிதுஉட்கார்ந்து கொண்டது .அதற்குள் வனஜா வந்து விட்டார் வந்த வேலை முடிந்தது வீட்டைச் சுற்றிக்க்காண்பித்தார் .ஹால் ரூம் எல்லா இடங்களிலும் மகன்-மருமகள் பேத்தி படங்கள் பேரன் பேத்தி அனுப்பிய வாழ்த்து அட்டைகள் .பரிசுப் பொருள்கள் போன்றவை அலங்காரமாக இடம்பெற்று இருந்தன "உங்கள் மகன்-மருமகள் வேலைக்குப் போயிருக்காங் களாம்மா?''
மகன் யு.கே ல வேலை செய்றான்மருமகள் பெங்களூரில் தான் இருந்தா. இப்ப ஒரு ப்ரஜெக்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஐந்து வருஷம் டேபுடேஷ்ன்ல போயிருக்கா "அப்போ பேரப் பசங்க ?

பேரன் டெல்லில ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறான் .பேத்தி இப்ப சிங்கபபூர்ல படிக்கிற சின்னக் குழந்தைங்கள்ளல இருந்தே ஹஸ்டல்தான் டிஸிப்ளிண்ட வரணும் . இல்லையா?
ஓ ..அப்ப நீங்க  மட்டும்தான் இங்க இருக்கிங்களா?
இல்லை ..நான் பெங்களூரின் எல்லையில் உள்ள ஒரு ஹோமில் இருக்கிறேன் அந்த முதியோர் இல்லத்தை நடத்துவதே நான் தான் !அதனால் எனக்கு அந்த வேலைகளே சரியாக இருக்கும் !''
அப்போ இவ்ளோ பெரிய வீட்டை சும்மாதான் போட்டு   வெச்சுருக்கிங்களா ?

இல்லை ..ஜிக்கியும் விக்கியும் இருக்காங்களளே !"

யார் அது ?இதோ இந்த பெர்ஷியன் 'கேட்' ஸ்தான்!"

சமையல்காரம்மாளின்  பின்னாலிருந்து அந்தப் பூனைகள் குடு குடு என ரீ என்ட்ரி தந்தன !"இவை வெளிநாட்டுப் பூனைகள்..என்மருமகளுக்கு என்மகன் பரிசளித்தவை .விமானத்தில் தனி பணம் கட்டி அனுப்பி வைத்தான் .ஒவ்வொரு பூனையும் நாற்பதாயிரம் ரூபாய் !"
ஓ !"இதுகளுக்கு வெயில் தூசு ஒத்துக்காது அதனால் எப்பவும் ஏ ,ஸி ரூம்ல வெச்சுருக்கணும்"
ஓ!
நம்ம ஊரு பால் மீன் எல்லாம் சாப்பிடாது..மினரல் வாட்டர்,  டின்ட் பிஷ்,இம்போர்ட்டட் மில்க் தான் சாப்பிடும்
ஓ !
இதுகளுக்கு ஸ் பா 'கொடுக்க ,தனி ஆள் வெச்சுருக்கு.

ஸ்..அப்பா!"

சர்வ சுதந்திரமாக வளம் வந்த பூனைகளை ,மரியாதை கலந்த பொய் நேசத்துடன் சமயைல்காரம் மாள் ,சீராட்ட வனஜா பெருமையான  பார்வையில் ரசித்தார் .

   வேலை முடிந்து வெளியே வந்த நான் ஆட்டோ பிடிக்க நின்றிந்தபோது அந்தக் காட்ச்சியைக் கண்டேன் சாக்கடை ஓரமாக ஒரு குடிசை .மேற்கூரை என்று எதுவும் இல்லை தகரசீட்டுகளை வைத்து அவை பரண்துவிடாமலிருக்க
அதன்மீது பெரிய கற்களை வைத்திருந்தார்கள் கதவுக்கு பதிலாககோணித் திரை.வெளியே காற்றுக் கட்டிலில்ஒரு குடும்பம் உட்கார்ந்து டி .வி பார்த்துக் கொண்டிருந்தது .எதோ ஹாஸ்யக் காட்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர் .சாக்கடை ஓரமாக ஒரு கிழவன் குளித்துக் கொண்டிருக்க,     
  அவன் வயதான மனைவி அவன் தலைக்கு ஷாம்புபோட்டுக் கொண்டிருந்தாள் .முன்று கல் அடுப்பில் சிவப்பு நிறத்தில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது .இளம் பெண் ஒருத்தி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் .
  ட்ரவுசர் மட்டுமே அணிந்திருந்த சிறு பயல் ஒருவன் தேன் நிறத்தில்  புஞ்சை யாக இருந்த குட்டிப் புனை ஒன்றை விரட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

ஒரு கேள்வி :புஸு புஸு பூனை..இந்த நோஞ்சான் பூனை உண்மையில் எது அதிஷ்டம் செய்தது ?
ஒரு தகவல் ;   
மே -15-உலகக் குடும்ப தினம் 



.அனுஷா நடராஜன்   
.நன்றி மங்கையர் மலர்  

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

-உலகக் குடும்ப தினம் முன்னிட்டு அருமையான பகிர்வுகள்...