தாரமங்கலம் கோவில் சிற்பங்கள்
சேலம் அருகிலுள்ள தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் பௌர்ணமி அன்று சென்றுவந்தோம். அவ்வப்போது சுற்றிலும் கையூட்டு நிமித்தம் கேமிரா கையை யாராவது பிடிக்கிறார்களா என்று நோட்டம்விட்டபடியே கைக்கேமிராவில் க்ளிக்கிய உலகப்பிரசித்திபெற்ற கோவில் சிற்பங்கள் கீழே தொகுப்பாய் கொடுத்துள்ளேன். என்சாய்.
சிறுபடங்களை கர்ஸரால் க்ளிக்கினால் பெரிதாகும். ஸ்லைட்ஷோவாகவும் பார்க்கலாம். கவனிக்கவும், மூன்று பக்கங்கள் உள்ளது (மொத்தம் 47 படங்கள்). செய்தியோடையில் படிப்போருக்கு படங்கள் தெரியாவிடின் தளத்திற்கு ஒரு எட்டு வந்துபோகவும்.
உபரி விஷயங்கள் படங்களின் தொகுப்பிற்கு கீழே.
[nggallery id=2]
கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், புதிப்பிக்கப்படும் கோபுரம் மறைக்கப்பட்டுள்ளது.
கோவில் தளம்
மொத்தமும் ஊரிலிருந்து
12 அடி கீழே அமைந்துள்ளது. 6-7 கீழே அமைந்துள்ளது. மேலும் கோவிலின் பிரதான வாயிலான மேற்கு வாயில் சற்று மேடான பகுதியிலும் கிழக்கு வாயில் சமதளத்திலும் அமைந்துள்ளது. [கீழே பின்னூட்டத்தில் சரியான தகவல் கொடுத்துள்ள siddhadreams க்கு நன்றி]
யானையின் மதகை பதம்பார்க்கும் ஈட்டி முனைகள் கொண்ட பிருமாண்ட வாயிற்கதவுகள், தமிழ்நாட்டில் வேறு இடங்களில் அமைந்துள்ளதுபோலவே, போர்காலங்களில் மக்கள் பாதுகாப்பிற்கு கோவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.
கோவில் கேட்டைய முதலியார் என்ற சிற்றரசன் கட்டியதாக கூறப்படுகிறது.
கோவில் சிற்பவேலைப்பாடுகளின் நேர்த்திவகைகளும், மன்மதன், ரதி சிற்பங்கள், சிவாலயத்தில் காணப்படும் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள், ராமர், வாலி, சுக்ரீவன் ராமாயண சிற்பங்கள், கோவில் நாயக்கர் காலத்தியதோ என்று எண்ணவைக்கிறது. பல வருடங்களாய் அடுத்தடுத்து ஆண்டவர்களின் தாக்கம் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்.
கோவில் சிற்பவேலைப்பாடுகளின் நேர்த்திவகைகளும், மன்மதன், ரதி சிற்பங்கள், சிவாலயத்தில் காணப்படும் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள், ராமர், வாலி, சுக்ரீவன் ராமாயண சிற்பங்கள், கோவில் நாயக்கர் காலத்தியதோ என்று எண்ணவைக்கிறது. பல வருடங்களாய் அடுத்தடுத்து ஆண்டவர்களின் தாக்கம் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்.
கோவில் பிரதான வாயில் பிரகாரமே மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கலியாணவைபவ பந்தல் போன்று செதுக்கப்பட்டுள்ளது அபாரம்.
வருடத்தில் இரண்டு தினங்கள் மட்டும் கிழக்கிலிருந்து வாயில்வழியாக த்வஜஸ்தம்பம் மேலிருக்கும் நந்தியின் மேல்வழியாக சூரியஒளிக்கற்றை பாய்ந்து கோவில் கருவறையிலிருக்கும் சிவலிங்கத்தின்மேல் விழுமாம். தமிழ்நாட்டில் பல கோவில்களில் நாம் சந்திக்கும் கட்டடக்கலையின் சாமர்த்தியம்.
வருடத்தில் இரண்டு தினங்கள் மட்டும் கிழக்கிலிருந்து வாயில்வழியாக த்வஜஸ்தம்பம் மேலிருக்கும் நந்தியின் மேல்வழியாக சூரியஒளிக்கற்றை பாய்ந்து கோவில் கருவறையிலிருக்கும் சிவலிங்கத்தின்மேல் விழுமாம். தமிழ்நாட்டில் பல கோவில்களில் நாம் சந்திக்கும் கட்டடக்கலையின் சாமர்த்தியம்.
பொக்கிஷங்களை திறம்பட பாதுகாக்கும் நம் மக்களின் மேலான கலாச்சாரத்திலிருந்து வழுவாமல் சிலைகளின்மேல் மஞ்சள்காப்பு இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று பல உதாசீனங்களும் நிதர்சனம்.
அதேபோல், படம்பிடித்து நான்கு பேரிடம் காட்டி, அவர்களையும் கோவிலுக்கு வரவழைத்தால், வருவாய்க்கும், ஆஸ்திக ஞான மரபிற்கும் கேடாம். கேமிராவையோ கையூட்டையோ பிடுங்கிக்கொள்கிறர்கள் (பிறகு மட்டும் ஓகேவா?). சிற்பங்களின் மேல் கால்வைத்து நிற்பவர்களையும், அலேக்காக சிலைகளையே திருடிக்கொண்டு போவோர்களையும் தடுக்கவோ கண்டுபிடிக்கவோ முனைவதில்லை. பட்டாங்கில் உள்ள படி.
வாயில் உருளும் கல் உருண்டை அடக்கிய யாளி, மன்மதன் ரதி சிற்ப நேர்த்தி, வாலி வதம் சிற்ப சாமர்த்யம் (ராமருக்கு தெரியும் வாலிக்கு ராமரை தெரியாது!), என்று ஒவ்வொரு சிற்பத்திலும், சுவரிலும், கூரையிலும் பல ஆராய்ச்சி விஷயங்களை விவாதிக்கலாம். செய்வதாயில்லை.
வேறு தருணத்தில் ஆங்கிலேய அகதெமிக் (Prof. MIT, USA) ஒருவர் இந்தியாவைப்பற்றி உளறினார் என்பதற்காக நிஜ இந்தியா பற்றி ஒரு சாம்பிளுக்காக Invisible India என்று குடவாயிற்கோவில் வாயிலில் நின்றிருந்த யானையை இந்திய பாரம்பர்யம் பிளிர, சே, மிளிர ஆங்கிலத்தில் விளக்கப்போய், நண்பர்கள் இணையத்தில் என்னை ஓட்டிய ஓட்டலின் புழுதி இன்னமும் அடங்கவில்லை. அதான், நோ ஆராய்ச்சி.
தாரமங்கலம் கோவில் பற்றி வரலாறு, உபயோகமான தகவல்கள் கொடுத்தால் இப்பதிவில் இணைக்கிறேன். நன்றி.
நன்றி :-அருண் நரசிம்மன்
No comments:
Post a Comment