Tuesday, April 19, 2011


 மழை யில் நனைய வேண்டும்
பூமி குளிர வேண்டும்
செடிகொடி தழைக்க வேண்டும்
பூஉலகசெழிக்க வேண்டும்
மக்கள் நலமாக வாழ வேண்டும்
வாழ்க வளமுடன்

Monday, April 18, 2011

பிரச்னைக்கு தீர்வு ஒரு தயிர் கப்பில்

பிரச்னைக்கு தீர்வு ஒரு தயிர் கப்பில் 
ஒரு கப்பில் உள்ள தயிரில்,  வெண்ணை நெய் மோர் முன்றும் உள்ளது.அனால் தெரிவது தயிர் மட்டுமே ,இதனையும் அப்போ எப்படி கிடைக்கிறது தயிராய் ஒரு மத்தினால் கடையும் பொது. அதுபோல் தன பிரச்சனைகளும் . பிரச்சனைகளை பிரச்சனைகளாக பார்க்கும் வரை பிரச்சனை பெரிய பூதகரமானஒன்றாக தெரியும் பிரச்சனைகளை தயிர் போல் பாவித்து தயிராய் மத்தினால் கடைவதுபோல்  மூளையின்   உதவியுடன் அறிவை கொண்டு வெகு தீர்க்கமாக ஆராயிந்து பிரச்னையை சீர்துக்கிபார்த்து கடுமையான் முயற்சிக்குப்பின் நுனி உங்களுக்கு கிடைக்கும். நுனிகிடைத்தால்போதாத நீங்கள் பிரித்து மேயிந்து விட மாட்டிர்கள?எதை கடினம் என்று நினைத்தால் கடினம் தான் முடியும் என்று நினைதது கூர்ந்து கவனித்தால் நுனி முடிச்சை கண்டது விடுவீர்கள் வெற்றி உங்களுக்கே வாழ்க வளமுடன் அறிவு பூர்வமான வெற்றி பெற வாழ்த்துக்கள்         

தைரியமான பெண் வாழ்த்துக்கள்.

கருங்குழல்போன்று நீண்டு கிடந்த தார் ரோட்டின்மீது.பஸ் பயனித்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிரில் வந்த டூவீலரில் மோதிவிட,டூவீலர் சற்று  தள்ளிவிழுந்த்துவிட ,டூவீலரில் வந்தவர்கள் சிறிது காயத்துடன் தப்பிவிட,இது தெரியாதஓட்டுனர்,வண்டியில் வந்தவர்கள் வீலில் மட்டிகொண்டுவிட்டதாக நினனைத்து,பதட்டத்தில்வண்டியை விட்டு குதித்து ஓடிவிட.பஸ் தாறுமாறாக ஓட பஸ்ஸில் இருந்த பயணிகள் கூக்குரலிட. பஸ்ஸில் இருந்த பெண் பயணி ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓட்டுனர் இடத்துக்கு மாரி எத எதையோ செய்து பசை லேசாக ஒரு மரத்தில் மோதி நிறுத்தி பஸ்ஸில் இருந்த்த முப்பது பயணிகளையும் காப்பாற்றி விட்டார்.அவரின் தைரியத்தை பாரட்ட வேண்டியது நமது கடமை அந்த பெண் வாழ்க வளமுடன்.மென் மேலும் சிறந்த வளர வாழ்த்துக்கள்.   

Saturday, April 16, 2011


பாடித்ததில் ரசித்தது   


நீ வரத்தை வாளெடுத்துப்


போர்புரிகையில் 
கண்ணீர் கேடயங்களோடு 
காத்திருப்பேன் 
முட்டினாலும் மோதினாலும் 
இறுதியில் வெல்வது 
எப்போதும் நான் தான் 

Thursday, April 7, 2011

காச்சின் விசுவாசம்

பாரத்ததில்  ரசித்தது காச்சிகோ  
            காச்சிகோஎன்ற திரைப்படம் பார்த்தேன் மிகவு நன்று.தன எஜமானர் மிது நாய் கொண்ட அன்பை கட்டுவது தான் கதை.இரண்டு முனு பத்திரங்களை கொண்டது மிகவும் அழககொண்டு செல்கிறார் இயக்குனர்.ரயில்வே ஸ்டேசனில் ஒரு சிறு நாய் குட்டியை காண்கிறார்,அதை தன்னுடன் அழைத்துசென்று வளர்கிறா.அந்த நாய் அவருடன் சட்சனுக்கு வருகிறது,அவர் வேலைபார்த்து திரும்ப்பும்போது ஸ்டேசனில் இருந்து வீடு திரும்ப்புகிறது.இது ரோடீணாக தினத்தோறும் நடை பெறுகிறது. இரண்டு வருடம் கடந்து ஒரு நாள் இதேபோல் வீட்டிலிருந்து ஸ்டேசன் வந்து வேலைக்கு சென்றவர்.அன்க்கே இறந்து விட இது தெரியாத நாய் ஸ்டேசனில் காத்திருகிறது.அவர் வந்து வேடுவர் என்று பல நாள் கழிகிறது.ஒருநாள் அந்த வாழு வந்த அவர் மகள் நாயை தன வீட்டிக்கு கூட்டி செல்கிறார்அனால் அங்கிருந்து திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து விடுகிறது.ஒரு பழைய குட்ஸ் ரைய்ளுக்கு இடையில் படுத்து கொள்கிறது. ரயில் வரும்போது எல்லாம் . வாசல் பக்கம் வந்து பார்த்து விட்டு திரும்பவும் சென்று படுத்துகொல்கிறது இதுபோல் பதினொரு வருடங்கள் காத்திருகிறது.இதுதான் கதை. இதை மிகவு உணர்ச்சி போர்வமாக ஒருகாவியாம் போல் எடுத்து இருக்கிறார்கள் நாய் தனுனர்ச்சி கலை நன்றக  வெளிப்படுத்துகிறது.மொத்தத்தில்மிகவும் அருமை.இது ஒரு உண்மை கதை ஜப்பானில் அந்த ஸ்டேசனி இந்த நாயிக்கு சிலை இருக்கிறது 
இதை 1923 நில் இந்த நாய் கிடைக்கிறது 1925இல் அதன் எஜமானன் இறந்துபோகிறார்.1934 லில் நாய் இறக்கிறது இந்தபடம் பார்த்த பின் வெகுநேரம் மனதை பதித்தது உன்முகத்தில் ஒரு நாய் அன்பாக நக்கினால் ஏற்படுத்தும் ஈரத்துக்கு நிகராக இந்த உலகத்தில் எந்தவொரு பரிவையும் நீ ஒப்பிட முடியாது என்ற வாசகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது 
  

Tuesday, April 5, 2011



வெற்றி பெற வழி   

Saturday, April 2, 2011

படித்ததில் பிடித்தது  
கவிதை ஆனந்தத்தைத் தருகிறது 
கவிதை கவலையி மறக்க செயிகிறது 
கவிதை பாடியே சொல்லவேண்டும் 
வசனம்போல் வாசிக்ககூ டாது 
வசனம் நடப்பதை  போன்றது 
கவிதை நாட்டியம் போன்றது 

Friday, April 1, 2011

சப்பாத்தியின்
கொத்து முள்ளைமிதித்தாது போல்
சங்கடங்கள் அழுத்த
கண்ணிவடிகிற போது
குழந்தைக்குசோறுட்டும்
நிலா மாதிரி
நீங்களேன்
எதிரில் இருப்பதே பாக்கியம்
அறுதல் வேறு
சொல்லவேண்டுமா;
கார்முகில்